ஈரானின் இஸ்பஹான் பகுதியை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது ஏன்?
ஈரான்- இஸ்ரேல் இடையே கடந்த சில வாரங்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
காசா மீது இஸ்ரேல் தாக்குவதற்கு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது.
இஸ்ரேல் கடந்த 1ம் திகதி நடாத்திய தாக்குதலில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் சேதம் அடைந்தது.
இதற்கு பதிலடி வழங்கப்படும் என தெரிவித்த ஈரான், இஸ்ரேல் நோக்கி தாக்குதலை தொடுத்தது.
இதன் பின்னர் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில், இஸ்ரேல் நிதானமாக இருக்கும்படி அமெரிக்கா கூறியது.
எனினும் வெள்ளியன்று கடைசி நேரத்தில் அமெரிக்காவுக்கு தகவல் தெரிவித்த இஸ்ரேல், ஈரான் எல்லைக்குள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
ஈரானின் கிழக்கு பகுதி மற்றும் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள இஸ்பஹான் என்ற இடத்தில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இப்பகுதி பெரிய விமான தளம், பெரிய ஏவுகணை தயாரிப்பு வளாகம் மற்றும் பல அணுசக்தி நிலையங்கள் உள்ள இடமாகும்.
ஈரானிய ராணுவ உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள இடத்தை குறிவைத்து இஸ்ரேலின் தாக்குதல் இருந்ததாக கூறப்படுகிறது.
எனினும் சேதம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை, ஏவுகணை குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.
ராணுவ தளம் அருகே வெடிச்சத்தம் கேட்டதாகவும், உடனடியாக வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாகவும் ஈரானின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
தாக்குதலை தொடர்ந்து ஈரான் வணிக விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தற்போது தடைகள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.