ஈரானைத் தாக்கப்போவது குறித்து அமெரிக்காவை எச்சரித்த இஸ்ரேல்
ஈரான் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்போவது தொடர்பில் அமெரிக்காவை இஸ்ரேல் எச்சரித்ததாக இத்தாலி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை எச்சரித்த இஸ்ரேல்: இத்தாலி தகவல்
ஈரான் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்போவது தொடர்பில், அமெரிக்காவை இஸ்ரேல் எச்சரித்ததாக இத்தாலி தெரிவித்துள்ளது. அமெரிக்கா இந்த தகவலை G7 அல்லது the Group of Seven நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு தெரிவித்ததாக இத்தாலி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால்…
ஆனால், அது வெறும் கடைசி நேர தகவல் மட்டுமே என அமெரிக்கா கூறியதாக இத்தாலி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான Antonio Tajani தெரிவித்துள்ளார்.
ட்ரோன்கள் மூலம் ஈரானைத் தாக்கப்போவதாக அமெரிக்காவுக்கு கடைசி நேரத்தில் ஒரு தகவலை இஸ்ரேல் தெரிவித்ததாகவும், அது வெறும் தகவல் மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்று அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் தரப்பு தாக்குதல் நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்து ஈரான் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகளை துவக்கியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. என்றாலும், அந்த தாக்குதல் குறித்து இதுவரை இருதரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.