பிறந்த ஐந்தே மாதங்களில் 4.2 கோடி ரூபாய் சம்பாதித்த Infosys நாராயணமூர்த்தியின் பேரன்
இந்தியாவின் முன்னணி IT சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் (Infosys) இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் பேரன் எக்ரா ரோஹன் (Ekagrah Rohan Murty), பிறந்த 5 மாதங்களில் ரூ.4.2 கோடி சம்பாதித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன், இன்ஃபோசிஸின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தி, இன்ஃபோசிஸின் 15 லட்சம் பங்குகளை (0.04% பங்குகள்) தனது பேரனுக்கு பரிசாக வழங்கினார். இதன் மதிப்பு 240 கோடி ரூபாய் ஆகும்.
சமீபத்தில், இன்ஃபோசிஸ் நிறுவனம் ஈவுத்தொகையை அறிவித்தது.
அதன்படி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை வைத்திருக்கும் எக்ரா ரோஹன் தனது கணக்கில் ரூ.4.2 கோடி ஈவுத்தொகையைப் பெறுவார்.
கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் திகதி பெங்களூரில் பிறந்த எக்ரா ரோஹன் மூர்த்தி, நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி ஆகியோரின் மூன்றாவது பேரக்குழந்தை ஆவார்.
ஏக்ராவிற்கு முன் ரோஹன் மூர்த்தி மற்றும் அபர்ணா கிருஷ்ணன் தம்பதியருக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.