வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் உணவங்களை குறிவைக்கும் அதிகாரிகள்!
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றி உணவு விற்பனையில் ஈடுபடும் உணவகங்களைத் தேடி தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக காலி முகத்திடல், ஹிக்கடுவை, எல்ல போன்ற பகுதிகளை இலக்கு வைத்து குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றி வடை ஒன்றினை 800 ரூபாய்க்கும், கொத்து ரொட்டியை 1,900 ரூபாய்க்கும் விற்பனை செய்ய முற்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.