தமிழர்களின் ஆதரவை ரணில் பெற முடியாது: சஜித் தரப்பு குற்றச்சாட்டு
ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்கள் பக்கம் நிற்கும் வரை அவரால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
அவர் மேலும் கூறியதாவது,
“நாட்டில் உள்ள வாக்காளர்களில் 40 சத வீதமானோர் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை.
இந்நிலையில் 60 சதவீத வாக்குகளை வைத்துத்தான் கருத்துக் கணிப்புகள் வருகின்றன. அது உறுதியான முடிவாக அமையாது.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள், ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்கள் பக்கம் நிற்கும் வரை அவருக்கு ஆதரவு வழங்கமாட்டார்கள்.
எனவே, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள மக்களுள் பெரும்பாலானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தி பக்கம்தான் தற்போது நிற்கின்றனர். ரணில் விக்ரமசிங்க எப்படித்தான் முயற்சித்தாலும் ராஜபக்சர்களுடன் இருக்கும் வரை அவரின் முயற்சி வெற்றியளிக்காது.
தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் என்னைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு வரவேற்பு உள்ளது. அந்த மக்களின் உரிமைக்காக முன்னின்றவன் நான். அதனால் சிங்களப் புலி என்றுகூட முத்திரை குத்தினர்.” என தெரிவித்துள்ளார்.