‘ஜாமீனுக்காக சிறையில் வேண்டுமென்றே மாம்பழம், இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்’: அமலாக்கத்துறை குற்றச்சாட்டின் பின்னணி
டெல்லியில் மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு வழக்கில் திகார் சிறையில் உள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் பெறுவதற்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்பு வகைகளை சாப்பிடுவதாக அமலாக்கத்துறை நேற்று டெல்லி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது. சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உயர்த்தி காட்ட முயன்றுவருவதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவு அடிக்கடி மாறுபடுவதாகக் கூறி அவருடைய மருத்துவரை சந்திக்க அவருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வெல்லி நீதிமன்றத்தில் அவரது தரப்பு மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் ஜோஹாப் ஹுசைன், ‘ஒரு சர்க்கரை நோயாளி தனது ரத்த அளவை அதிகரிக்க வேண்டுமென்றே சிறையில் மாம்பழங்களை சாப்பிடுகிறார், அதுமட்டுமின்றி, இனிப்பு வகைகள், வெள்ளைச் சர்க்கரை கலந்த டீ ஆகியவற்றை எடுத்துக்கொள்கிறார். இதுபோன்ற மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான காரணங்களை கெஜ்ரிவால் உருவாக்குகிறார்’ என்றார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேக் ஜெயின், அவர் சாப்பிடும் உணவு, மருத்துவர் பரிந்துரைத்த உணவுகள்தான் என வாதிட்டார். மேலும், ஊடகங்களில் அவர்களுக்கு அதிக செல்வாக்கு இருப்பதால் இதுபோன்று வெளியிடுவதாக அமலாக்கத்துறை மீது குற்றஞ்சாட்டினார்.