;
Athirady Tamil News

நாட்டில் அண்மைக்காலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள் – சுகாதாரத் துறை எச்சரிக்கை

0

இலங்கையில் கடந்த வருடங்களில் அதிகளவிலான உயிரிழப்புக்கள் பதிவாகியமைக்கு பிரதான காரணமாக மாரடைப்பு (heart attack) அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் (Ministry Of Health ) தொற்றா நோய்களுக்கான பணிப்பாளர் விசேட வைத்தியர் ஷெரில் பாலசிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பொது மருத்துவமனைகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மாரடைப்பால் (heart attack) ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதிக உயிரிழப்பு

விசேட வைத்தியர் ஷெரில் பாலசிங்கம் மேலும் கருத்து தெரிவிக்கையில், இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்கள் சேதமடைவதால் இந்த நோய் நிலை ஏற்படுகிறது. தொற்றா நோய்களுக்கு பல சிறப்பு ஆபத்து காரணிகள் உள்ளன.

முதலாவது ஆரோக்கியமற்ற அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெயின் பயன்பாடு, உடல் செயல்பாடு இல்லாமை, புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றின் பயன்பாடு ஆகும்.

கம்ப்யூட்டர் கேம்களுக்கு அடிமை
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணனிகளின் அதிகரித்த பாவனையினால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவரும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையிலிருந்து விலகியுள்ளதாக வைத்தியர் ஷெரில் பாலசிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் ஒரே இடத்தில் அதிக நேரம் செலவழித்து ஒன்லைன் கம்ப்யூட்டர் கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

வீட்டில் வயதான இல்லத்தரசிகள் கூட எப்போதும் டி.வி பார்த்து மணிக்கணக்கில் அமர்ந்துதான் இருப்பார்கள். மேலும் வயது வரம்பு இல்லாமல் மொபைல் போன்களுக்கு அடிமையாகி இருப்பது பெரும் சோகம். நாம் முடிந்த போதெல்லாம் நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்திலேயே மாரடைப்பு (heart attack) காரணமாக அதிகளவானோர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.