அது இஸ்ரேலின் தாக்குதல் அல்ல: அடுத்தக் கட்டத்திற்கு நகரும் போர்
ஈரானுக்கு ஏவப்பட்ட ட்ரோன்கள் வெறும் பொம்மைகள் என்றும் இந்த தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் இல்லை எனவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் ( Hossein Amirabdollahian)தெரிவித்துள்ளார்.
ஈரானின் Isfahan பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் இஸ்ரேல் நடத்தியதாக கூறப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அது வெறும் பொம்மைகளால் நடத்தப்பட்ட தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியமைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் இது ஈரானுக்குள் ஊடுருவியவர்கள் நடத்திய தாக்குதலாக இருக்கவே வாய்ப்புகள் காணப்படுவதாக ஈரானின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆதாரங்கள்
மேலும், குறித்த ட்ரோன்கள் ஈரானில் இருந்தே இயக்கப்பட்டுள்ளதாகவும் சில நூறு மீற்றர்கள் பறந்த நிலையில் அவை அழிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அதேவேளை, இந்த தாக்குதல்களுக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்புகள் காணப்படுவதாக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் ஈரான் இதனை ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.