சூரிய குடும்பத்தில் மறைந்திருக்கும் கோள் 09… புதிய ஆதாரங்கள் கண்டெடுப்பு!
நமது சூரிய குடும்பத்தில் மறைவான கோள் ஒன்று இருப்பதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக, சில வானியலாளர்கள் நமது சூரிய மண்டலத்தின் விளிம்பில் உள்ள அசாதாரண நடத்தை இன்னொரு கோள் இருப்பதற்கான சான்று என கூறி வருகிறார்கள் அதே சமயம் இது சூரிய மண்டலத்தின் மிகத் தொலைவில் அதாவது சூரியனிலிருந்து சுமார் 250 மடங்கு தொலைவில் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, அது ஒரு கோள் என்றும் அதற்கான ஆதாரங்கள் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர், இந்தக் கிரகமானது நெப்டியூனுக்கு அப்பால் சூரிய மண்டலத்தின் விளிம்பில் அமைந்திருப்பதாகவும் அவர்கள் கணித்துள்ளனர்.
கோள் 09
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கோளுக்கு கோள் 09 (Planet 09) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தக் கோள் நெப்டியூன் சுற்றுப்பாதையுடன் தொடர்புகொள்வதால் அவற்றின் இயக்கம் நிலையற்றதாக இருப்பதனாலும் உறுதியற்ற தன்மையுடன் காணப்படுவதனால் சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சூரிய மண்டலத்தின் மர்மம்
எனவே இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சிலியில் ஆய்வுகூடமொன்று அமைக்கப்பட்டு வருவதாகவும், அந்த ஆய்வுகூடத்தை இயக்கும்போது அந்த தொலைதூர பொருட்களின் நடத்தையைப் புரிந்துகொள்ள வானத்தை ஸ்கான் செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த ஆய்வுகூடம் நமது சூரிய மண்டலத்தின் வெளிப்புறப் பகுதிகளின் மர்மங்களைப் பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வழங்குவதற்கு உதவும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.