யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினரால் தொற்றா நோய் விழிப்புணர்வு பவனி
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் தனியார் அமைப்பொன்றினால் தொற்றா நோய் விழிப்புணர்விற்கான துவிச்சக்கர வண்டி பவனி இடம்பெற்றுள்ளது.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது நேற்று (21.04.2024) இடம்பெற்றுள்ளது.
விழிப்புணர்வு பவனி
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என்.தயாளினி தலைமையில் ஆரம்பமான குறித்த தொற்றா நோய் விழிப்புணர்வு பவனியை மருத்துவர்கள், ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த துவிச்சக்கர வண்டிப் பவனியானது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து ஆரம்பித்து நெல்லியடி நகரிற்கு சென்று அங்கிருந்து வதிரிச் சந்தி ஊடாக மாலைசந்தி ஊடாக மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை சென்றடைந்துள்ளது.