அரிசி இறக்குமதிக்கு மீண்டும் தடை: பாகிஸ்தானை எச்சரிக்கும் ரஷ்யா
ரஷ்யாவினால் முன்வைக்கப்படும் சர்வதேச தரத்தை சரக்குகளில் கவனிக்கப்படவிட்டால் அரிச இறக்குமதியை மீண்டும் தடை செய்ய போவதாக ரஷ்யா பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.
ரஷ்யாவின் FSVPS என்ற அமைப்பு இந்த எச்சரிக்கையை பாகிஸ்தானுக்கு விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் சர்வதேச மற்றும் ரஷ்ய தாவரவியல் விதிகள் மீறப்பட்டுள்ளதை கண்டறிந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடனடி விசாரணை
அத்தோடு, ரஷ்யாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் வர்த்தகப் பிரதிநிதி இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேவேளை, இவ்வாறான விதிமீறல்களை தடுத்து நிறுத்துமாறு பாகிஸ்தான் தூதரகத்துக்கு ரஷ்ய அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதிக்கு ரஷ்யா தடை விதித்ததுடன் 2006 டிசம்பரில், உணவுப் பாதுகாப்புத் தரத்தை பூர்த்தி செய்யாததால் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை ரஷ்யா நிறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.