24 ஆண்டுகள் பழமையான நேட்டோ படைகளின் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: 1300 பேர் வெளியேற்றம்
செர்பியா நாட்டில் நேட்டோ படைகளினால் வீசப்பட்ட சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
செர்பியா நாட்டின் மீது, 1999-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலின்றி நேட்டோ படைகள் குண்டுமழை பொழிந்தன.
குறித்த தாக்குதல் 78 நாட்கள் வரை தொடர்ந்ததுடன் அதனால் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
1300 பேர் வெளியேற்றம்
இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் தாக்குதலில் வெடிக்காமல் இருந்த வெடிகுண்டு ஒன்று நிஸ் என்ற நகரத்தில் கட்டுமான பணிகளின் போது கண்டறியப்பட்டதையடுத்து அங்கிருந்து 1,300 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதேவேளை, அந்த வெடிகுண்டு அகற்றப்பட்டதாகவும் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அது அழிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.