மாட்டுப் பண்ணையாக மாறிய ராஜபக்சர்களின் மாளிகை
கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பசில் ராஜபக்சவின் கம்பஹா மல்வானை இல்லத்தை கால்நடைகளை பராமரிக்கும் நிலையமாக மாற்ற அனுமதி வழங்குமாறு நீதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மல்வானை சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், இந்தக் கோரிக்கையை எவ்வாறு கையாள்வது என்பதை அறிய, அமைச்சகத்தின் சட்டத் துறைக்கு இந்த யோசனை அனுப்பப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தக் காணி தொடர்பில் நீதியமைச்சினால் தீர்மானம் எடுக்க முடியாது எனவும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் கருத்தைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மாடுகளுக்கு உணவு
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடைப் பண்ணைகளில் கடமையாற்றிய கால்நடை உத்தியோகத்தர் ஒருவர் இறைச்சிக் கூடங்களில் இருந்து விடுவிக்கப்படும் கறவை மாடுகள் மற்றும் மாடுகளுக்கு உணவு மற்றும் மருந்து வழங்க இந்த வீடு மற்றும் காணியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் அபகரிக்கப்பட்ட மல்வானை காணி மற்றும் வீடு கால்நடை பராமரிப்பு நிலையத்தை நடத்துவதற்கு ஏற்றது என கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.