கொழும்பில் தீக்கிரையாகிய மர ஆலை
கொழும்பு – பன்னிப்பிட்டிய (Colombo – Pannipittiya) பகுதியில் மர ஆலை ஒன்றில் திடீரென பரவிய தீயினால் ஆலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவமானது, இன்று (22.04.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கொழும்பு கோட்டை மாநகரசபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தெஹிவளை நகரசபையின் நீர் பீரங்கிகளை கொண்டு தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முற்றாக பரவிய தீ
மேலும், தீ பரவியதற்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம், விபத்தின் போது சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் எந்த உயிர் சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.