;
Athirady Tamil News

இலங்கை வான்பரப்பில் நிகழவுள்ள மாற்றம்

0

இலங்கைக்கு (Sri Lanka) மேற்கு வானில் வருடாந்த லிரிட் (Lyrid) விண்கல் மழைப் பொழிவை அவதானிக்கலாம் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர ( Gihan Weerasekera) தெரிவித்துள்ளார்.

வீணா எனப்படும் நட்சத்திர வடிவத்துடன் இன்று (22) இரவு இதனைக் காண்பதோடு ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 20 விண்கற்களை வெற்றுக் கண்ணால் அவதானிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லிரிட் விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை நிகழும். இந்நிலையில், விண்கல் மழை நாளை காலை அதிகபட்சமாக இருக்கும். ஆனால் முழு நிலவு இருப்பதால் பார்ப்பது கடினமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெடிப்பின் விளைவு
விண்கல் மழை என்பது விண்கல் செயல்பாட்டில் நிகழும் வெடிப்பின் விளைவாக உருவாகுவதாகும்.

விண்கற்கள் சிறுகோள்கள் அல்லது வால்மீன்கள் போன்ற சில வான் பொருட்களின் பின்னணியில் எஞ்சியிருக்கும் சிறிய குப்பைகள் ஆகும். பூமி இந்த பொருளின் பாதையை கடக்கும்போது ​​​​அது வளிமண்டலத்தில் விழும் இந்த துண்டுகளின் பலவற்றை எடுத்துக்கொள்கிறது.

இந்த பொருள்கள் வளிமண்டலத்துடன் ஒப்பிடும்போது செக்கனுக்கு 15 கிலோ மீற்றர் வேகத்தில் நகரும்.

உண்மையில், அவை மிக வேகமாக விழுகின்ற நிலையில் அவற்றின் முன்னால் உள்ள காற்று போதுமான அளவு வேகமாக வெளியேற முடியாத நிலையில் அதற்குப் பதிலாக வேகமாக நசுக்கப்பட்டு வெப்பமடைகிறது.

இந்நிலையில், விண்கல்லின் மேற்பரப்பு 1600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அடைவதோடு பிரகாசமாக ஒளிரும். எனினும், வான் பரப்பில் இவை குறுகிய கால ஒளியின் கோடுகளாக மட்டுமே தெரியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.