புதுக்குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்
புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விசுவமடு -10 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த சேர்ந்த கிருஷ்ணன் கிருஸ்ணராசா என்ற 52 வயதுடைய 05 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இதேவேளை குறித்த குடும்பஸ்தர் குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.