;
Athirady Tamil News

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது பிள்ளைகளின் திருமணத்திற்கு செலவழித்தது எத்தனைக் கோடிகள் தெரியுமா?

0

ஆசியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி உலகின் 11வது பணக்காரர் ஆவார்.

Bloomberg Billionaires Index-ன் படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 113 பில்லியன் டொலருக்கும் அதிகமாகும்.

Ultra Luxury வாழ்க்கை முறையை பின்பற்றும் அம்பானி தனது குடும்பத்துடன், நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல அடுக்குகளைக் கொண்ட ஆண்டிலியா (Antilia) பங்களாவில் வசித்து வருகிறார்.

அம்பானி குடும்ப உறுப்பினர்கள் புல்லட் மற்றும் வெடிகுண்டு தாக்காத பாதுகாப்பான கார்களில் பயணம் செய்கிறார்கள்.

முகேஷ் அம்பானி-நீதா அம்பானி தம்பதியினர் தங்கள் வீட்டில் நடக்கும் விருந்துகளுக்கும் விழாக்களுக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றனர்.

அந்த வகையில், அம்பானி தம்பதி தங்கள் மூன்று குழந்தைகளான ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்காக எவ்வளவு பணம் செலவழித்துள்ளனர் என்று தெரியுமா?

இஷா அம்பானி-ஆனந்த் பிரமல் (2018)
இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் ஆகியோரின் ஆடம்பரமான திருமணத்திற்காக முகேஷ் மற்றும் நீதா அம்பானி சுமார் ரூ.830 கோடி செலவிட்டுள்ளனர்.

ஒவ்வொரு திருமண அழைப்பிதழ் ரூ.3 லட்சம் செலவிடப்பட்டது. திருமணத்தில் நிகழ்ச்சி நடத்த கிராமி விருது பெற்ற பாடகி Beyonce-க்கு ரூ. 33 கோடி கொடுக்கப்பட்டது.

திருமண விழா மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்றது. நிச்சயதார்த்த விழா இத்தாலியில் (லேக் கோமோ), திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் உதய்பூரில் மற்றும் பிரம்மாண்டமான திருமணம் மும்பையில் உள்ள ஆண்டிலியாவில் நடைபெற்றது.

திருமணத்தில் பிரியங்கா சோப்ரா, ஹிலாரி கிளிண்டன், கிரேக்க-அமெரிக்க எழுத்தாளர் அரியானா ஹஃபிங்டன் மற்றும் பல பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா (2019)
ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் திருமணம் நாட்டின் பிரமாண்டமான திருமணமாக கருதப்படுகிறது.

செயின்ஸ்மோக்கர்ஸ் மற்றும் கோல்ட்ப்ளேயின் கிறிஸ் மார்ட்டின் ஆகியோர் நிகழ்த்திய திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுடன் திருமண கொண்டாட்டங்கள் செயின்ட் மோரிட்ஸில் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து மும்பையில் நடந்த மூன்று நாள் பிரம்மாண்ட திருமணத்தில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் Tony Blair, Google சிஇஓ சுந்தர் பிச்சை, கோடீஸ்வரர் லட்சுமி மிட்டல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆகாஷ் அம்பானியின் ஒரு திருமண அழைப்பிதழுக்கு ரூ.1.5 லட்சம் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா திருமணத்தில் பிரபல இசைக் குழுவான மெரூன் இசை நிகழ்ச்சியும் நடத்தியது.

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் (2024)
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஆனால், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மார்ச் முதலாம் திகதி முதல் 3-ஆம் திகதி வரை நடந்த திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் நிகழ்ச்சியை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

Meta சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் இவாங்கா டிரம்ப் உட்பட உலகெங்கிலும் உள்ள பல முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பட்டய விமானங்கள், சொகுசு அறைகள், உலகத்தரம் வாய்ந்த சமையல் கலைஞர்கள், பிக்-அப் மற்றும் டிராப்-ஆஃப் செய்ய விலையுயர்ந்த வாகனங்கள் என அம்பானிகள் ஆடம்பரத்தில் தாங்கள் எப்போதும் முன்னிலையில் இருப்பதை நிரூபித்தார்கள்.

ஆசியாவின் பணக்கார குடும்பமான அம்பானிகள், ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய விழாவிற்கு மட்டும் ரூ.1260 கோடி செலவிட்டுள்ளனர்.

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.