இளவரசர்கள் ஹரி வில்லியம் தொடர்பில் உலவும் வதந்திகள்: உண்மையில்லை என்கிறார் சார்லசுடைய பட்லர்
மன்னர் சார்லஸ் தனது முன்னாள் காதலியான கமீலாவைத் திருமணம் செய்ததில், அவருடைய பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை என்னும் செய்தி நீண்ட காலமாகவே உலவி வருகிறது.
உண்மையில்லை என்கிறார் சார்லசுடைய பட்லர்
மன்னர் சார்லஸ் தனது முன்னாள் காதலியான கமீலாவைத் திருமணம் செய்ததில், அவருடைய பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை என்னும் செய்தியில் உண்மையில்லை என்கிறார் மன்னர் சார்லசுடைய பட்லரான Grant Harrold.
உண்மையில், 2005ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த திருமணத்தில் மணமகனின் தோழனாக நின்றதே வில்லியம்தான் என்கிறார் அவர்.
தன் தந்தையும் கமீலாவும் அணிந்துகொள்ள இருந்த திருமண மோதிரங்களை பாதுகாப்பாக கையில் வைத்திருந்ததே வில்லியம்தான் என்கிறார் Grant Harrold.
மன்னர் சார்லஸ் தனது முன்னாள் காதலியான கமீலாவைத் திருமணம் செய்ததில், வில்லியம் மற்றும் ஹரிக்கு இஷ்டமில்லை என்பது ஒரு வதந்தி என்று கூறும் Grant Harrold, ஏனென்றால், நானும் அந்த திருமணத்தில் பங்கேற்றிருந்தேன் என்று கூறியுள்ளார்.