;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் நடந்த நெகிழ்ச்சி செயல் ; தந்தைக்காக மகன் கட்டிய நினைவாலயம்

0

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பகுதியில் இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர் பிரமாண்டமான நினைவாலயத்தை அமைந்துள்ளார்.

கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த நினைவாலயத்தை அமைத்து அதற்கு கந்தக்கோட்டம் என பெயர் சூட்டியுள்ளார்.

நினைவாலயம்
கடந்த 2011.04.01ஆம் திகதி அன்று கந்தசாமி உயிரிழந்த நிலையில் அதற்கு அடுத்த வாரமே இந்த கட்டட நிர்மாணத்துக்கான இந்த நினைவாலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த நினைவாலயமானது தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஒரு வருடத்தில் பெரும்பாலான வேலைகள் செய்து முடித்த இருந்தாலும், நிதிப் பிரச்சினை காரணமாக அதனை முற்றுப்பெற வைக்க முடியாத நிலையில் மிகுதி வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அத்துடன், கடந்த பல வருடங்களாக, இந்த நினைவாலயத்திற்கு அருகாமையில் வசிக்கும் மாணவர்களுக்கு 40% இலவசக் கல்வி வழங்கப்பட்டு வந்தது.

இந்த கட்டடக்கலையானது இந்திய கலைஞர்களால் கட்டப்பட்டது போன்று தோற்றமளித்தாலும் முற்றுமுழுதாக யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களின் கை வண்ணத்திலேயே கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாஜ்மஹால், ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் ஆலயங்களின் கட்டடக் கலைகளை உள்ளடக்கியே இந்த நினைவாலயம் அமைக்கப்பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.