சட்டவிரோதமாக படகு மூலம் பிரித்தானியா செல்ல முயன்ற ஐவர் பலி
பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 5 பேர் படகு விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் பிரித்தானிய நேரப்படி நேற்று (23) காலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் குழு
பிரான்சில் இருந்து 110 பேர் அடங்கிய சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று சிறிய படகொன்றில் பிரித்தானியாவுக்கு சென்றதாக பிரான்ஸ் நாட்டின் கடற்படையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது, இந்த படகு விபத்துக்குள்ளானதில் மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.
ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டம்
அதேவேளை, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டம் இன்று சட்டமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, நாட்டிற்குள் நுழைந்த சட்டவிரோத குடியேரிகள் அடுத்த வாரம் முதல் ருவாண்டாவிற்கு நாடுகடத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.