;
Athirady Tamil News

சீனாவுக்காக உளவு பார்த்ததாக ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் கைது

0

சீனாவுக்காக உளவு பார்த்ததாக, ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் கைது
ஜேர்மனியின் வலதுசாரிக் கட்சியான Alternative for Deutschland (AfD) கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், Maximilian Krah. இவரது உதவியாளரான Jian G என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள Jian Guo என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

Jian Guo, சீன ரகசிய உளவு அமைப்பின் பணியாளர் என ஜேர்மன் பெடரல் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளார்கள். அவர் தொடர்ந்து பலமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் மற்றும் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து சீன ரகசிய உளவு அமைப்பைச் சேற்ந்த ஒருவருக்கு தகவல்களை கடத்திவந்துள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யப்படுவார்
Jian Guo தனது உதவியாளராக பணியாற்றிவருவது உண்மை என்று கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினரான Maximilian Krah, அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தால், உடனடியாக அவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என்று கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர், இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவை ஐரோப்பிய ஜனநாயகத்தின் மீது, உள்ளிருந்தே நடத்தப்படும் தாக்குதலாக ஆகிவிடும் என்று கூறியுள்ளார். அத்துடன், Jian Guoவை பணிக்கமர்த்தியவர்கள், அதற்கு பொறுப்பேற்கவேண்டும் என மறைமுகமா Maximilian Krahஐ சாடினார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.