ராமர் புகைப்படம் உள்ள பிளேட்டில் சிக்கன் பிரியாணி.., சர்ச்சையில் சிக்கிய ஹொட்டல்
ராமர் புகைப்படம் பொறிக்கப்பட்ட பிளேட்டுகளில் சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்ட ஹொட்டலை இந்து அமைப்பை சேர்ந்த சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர்.
சமீப காலமாக கடவுள் ராமரை வைத்து சர்ச்சைகள் வந்தவண்ணம் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ராமரை பாஜக அடையாளப்படுத்துவது தான்.
இதனால், பாஜகவை சீண்டுவதற்காக ராமரை குறித்து பேசி வருகின்றனர். அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டதில் இருந்து சர்ச்சைகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
சிக்கன் பிரியாணி
இந்திய தலைநகர் டெல்லி, ஜகாங்கிர்புரி பகுதியில் ஹொட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹொட்டலில் ராமர் புகைப்படம் அச்சிடப்பட்ட பிளேட்டில் சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது.
இது பேப்பர் பிளேட் என்பதால் சாப்பிட்டு முடித்துவிட்டு அதை குப்பை தொட்டியில் வீசினர். ராமர் புகைப்படம் உள்ள பிளேட் குப்பை தொட்டியில் இருப்பது இந்து அமைப்புகள் சிலருக்கு தெரிந்தது.
இதனால், அங்கு வந்த இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஹொட்டலை அடித்து நொறுக்கியுள்ளனர். அதோடு, ஹொட்டல் உரிமையாளரையும், பணியாளர்களையும் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் நடத்திய விசாரணையில், ஹொட்டல் உரிமையாளர் மீது தவறு இருப்பது தெரியவந்தது. பின்பு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.