பாகிஸ்தானிலிருந்து நாடுகடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள்
பாகிஸ்தானில் தங்கியிருந்த 800க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் 837 ஆப்கானிஸ்தான் அகதிகள் நாட்டை விட்டு வெளியேறதலிபான் அகதிகள் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி 468 பேர் டோகாம் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்ததாகவும் மேலும் 369 அகதிகள் ஸ்பின் போல்டாக் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிரவாத செயல்கள்
ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக அந்நாட்டு புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் அகதிகள் நாடு கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு வீட்டு வசதி, மருத்துவ வசதி மற்றும் கல்வி வழங்குவது சிரமமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.