;
Athirady Tamil News

ஈரான் ஜனாதிபதியின் விஜயம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு – மூடப்படும் வீதிகள்

0

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை
குறிப்பாக கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையும் மூடப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி இப்ரஹிம் ரைசியின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்துடன் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.