;
Athirady Tamil News

தீவிரமடையும் போர் நிலை! சீனாவுக்கு பயணம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க அமைச்சர்

0

அமெரிக்க (America) இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் (Antony Blinken) இன்று (24) சீனாவுக்கு (China ) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

உலக போர் பதற்ற நிலைக்கு மத்தியில், அவர் நேற்று  ஷங்காய் நகரை சென்றடைந்துள்ளார்.

இந்த நிலையில், அன்ரனி பிளிங்கன் இன்று  (25) பீஜிங்கில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு இராஜதந்திர உறவுகள்
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அவரது இந்த பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன், இஸ்ரேல் மற்றும் தாய்வான் உள்ளிட்ட நாடுகளுக்கு, 95 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கவதற்கு அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன், டிக்டொக் செயலியை தடை செய்வதற்கான சட்டமூலத்தையும் அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன், சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.