இரத்தம் சொட்ட பக்கிங்ஹாம் அரண்மனை அருகில் பாய்ந்து சென்ற குதிரைகளால் பரபரப்பு
மத்திய லண்டனில் சாலை நடுவே ரத்தம் சொட்ட ஐந்து குதிரைப்படை குதிரைகள் சாரதி இல்லாமல் பாய்ந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து குதிரைகள்
குதிரைகளின் ஒரு சாரதிக்கு காயம்பட்டிருக்கலாம் என்றே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மத்திய லண்டனின் தெருக்களில் ஒரு ஜோடி குதிரைகள், பீதியடைந்து, அவற்றில் ஒன்று ரத்தத்தில் நனைந்தபடி பாய்ந்து சென்றுள்ளது.
WATCH: Horses escape in central London, colliding with cars and injuring at least 1 person pic.twitter.com/KIOd9T8jZF
— BNO News (@BNONews) April 24, 2024
வெளியான தகவலில், ஐந்து குதிரைகள் தங்கள் பகல் நேர உடற்பயிற்சியின் போது தப்பியதாக கூறப்படுகிறது. அதில் இரண்டு குதிரைகள் தற்போது பிடிபட்டுள்ளதாக லண்டன் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மத்திய லண்டனில் தற்போது சிக்கியுள்ள குதிரைகளை கண்டுபிடிக்க இராணுவம் உட்பட சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் மோதும் சூழல்
பிடிபட்டுள்ள இரு குதிரைகளையும் மீட்க ராணுவத்துனர் புறப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் அவர்கள் அந்த இரு குதிரைகளையும் மீட்டு கால்நடை மருத்துவரிடம் ஒப்படைப்பார்கள் என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அந்த குதிரைகளுடன் பல வாகனங்கள் மோதும் சூழல் உருவானதாக தகவல் வெளியாகியுள்ளது. பேருந்துடன் ஒரு குதிரை மோதியதாகவும் ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.