புதிய ஷெங்கன் விசா விதிகள்., ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு நற்செய்தி
ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) நற்செய்தியை வழங்கியுள்ளது.
இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் புதிய விசா கொள்கையை அறிவித்துள்ளது.
குறுகிய கால தங்கும் விசாவான ஷெங்கன் விசாவுடன் (Schengen visa) ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் அந்த விசாவிற்கு மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.
ஆனால், இந்த புதிய முறையின் கீழ், அது இனி தேவையில்லை.
EU இந்தியர்கள் multi-entry Schengen visa-விற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறுகிய கால ஷெங்கன் விசாவிற்கு பதிலாக நீண்ட காலத்திற்கு செல்லுபடியாகும்.
விசாக்களின் செல்லுபடியாகும் காலம் பயணிகளின் பயண வரலாற்றைப் பொறுத்தது.
ஐரோப்பிய ஒன்றியம் ஏப்ரல் 18 அன்று இந்திய குடிமக்களுக்கு multi-entry visa-க்களை வழங்குவதற்கான குறிப்பிட்ட விதிகளை அங்கீகரித்தது.
தற்போதைய விசா நிலையான விதிகளை விட இது மிகவும் எளிமையானது. புதிய விசா ‘Cascade’ முறையின் கீழ், இந்திய குடிமக்களுக்கு இப்போது Long-term, multi-entry Schengen visa-க்கள் வழங்கப்படும்.
இதற்குத் தகுதி பெற, கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை விசா அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
விசா சட்டப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டால், அது இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.