மிக கொடூரமான முறையில் பூனைகளை கொலை செய்யும் நபர்! அச்சத்தில் மக்கள்
தென் கொரியாவில் மனிதாபிமானமற்ற முறையில் 70க்கும் மேற்பட்ட பூனைகளை நபரொருவர் கொலை செய்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூனை ஒன்று தனது காரை கீறி சேதப்படுத்தியதனால் மற்ற பூனைகள் மீதும் வெறுப்பு ஏற்பட்டு பூனைகளை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் கடந்த டிசம்பர் 2022 முதல் செப்டம்பர் 2023 க்கு இடையில் 70இற்கும் மேற்பட்ட பூனைகளை கொலை செய்துள்ளார்.
குறிப்பாக பூனைகளை கொலை செய்வதற்காக அவர் ஒன்லைன் தளங்களில் இருந்து அவற்றை தத்தெடுத்து பின்னர் கொலை செய்துள்ளார்.
மேலும் சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் மிகக் கொடூரமான விலங்கு கொடுமை வழக்குகளில் ஒன்றாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.