;
Athirady Tamil News

செல்வந்தர்களுக்கு ₹16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த பிரதமர் மோடி – ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

0

பிரதமர் மோடி ஆட்சியில் கடன் தள்ளுபடியால் ஆதாயம் அடைந்த பெரும் தொழிலதிபர்களிடம் இருந்து 16 லட்சம் கோடியை மீட்டு அதனை 90 சதவிகித இந்தியர்களுக்கு திருப்பி தருவோம் என்று ராகுல் காந்தி வாக்குறுதியளித்தார்.

டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சமூக நீதி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது என்றும் இதனைப் பார்த்து பிரதமர் மோடி பயந்துள்ளதாகவும் கூறினார்.

நாட்டில் உள்ள பெருந்தொழிலதிபர்களின் பதினாறு லட்சம் கோடி ரூபாய் (1,60,00,00,00,00,000) கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்திருப்பதாகக் கூறிய ராகுல், பிரதமர் தள்ளுபடி செய்த பணத்தை தொழிலதிபர்களிடம் இருந்து மீட்டு நாட்டில் உள்ள 90 சதவிகித மக்களுக்கு பகிர்ந்தளிப்போம் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

ஓபிசிகளுக்கு அதிகாரமளித்தல் என்பது தனக்கு அரசியல் பிரச்சினை அல்ல, இது எனது வாழ்க்கையின் நோக்கம் என்றும் கூறினார்.

முன்னதாக , தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, “பெரும் செல்வந்தர்களுக்கும், பணக்காரகர்களுக்கும் தள்ளுபடி செய்த பதினாறு லட்சம் கோடியை ரூபாய் (1,60,00,00,00,00,000) வைத்து, 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் விகிதம் கிடைக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கலாம் அல்லது 16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் விகிதம் உதவித் தொகை கொடுத்து அவர்களின் வாழ்கை போக்கை மாற்றியிருக்க முடியம்; 10 கோடி விவாசாய கடன்கள் தள்ளுபடி செய்து எண்ணற்ற தற்கொலைகலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும்; அடுத்த 20 ஆண்டுகளுக்கு வெறும் 400 என்ற விலையில் நாட்டு மக்களுக்கு சிலிண்டர்கள் கொடுத்திருக்கும்; 3 நிதியாண்டிற்கான ராணுவ செலவீனங்களை மேற்கொண்டிருக்கலாம்; தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்த வகுப்பினரின் உள்ள இளைஞர்களுக்கு பட்ட படிப்பு வரை இலவசமாக கல்வியைக் கொடுத்திருக்கலாம் என்று கூறிய அவர் நரேந்திர மோடியின் இந்த குற்றங்களை நாடு மன்னிக்காது என்றும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.