;
Athirady Tamil News

வவுனியா பல்கலை பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நுழைந்த நபரால் பரபரப்பு : மாணவி ஒருவரின் தாயாருக்கு நேர்ந்த விபரீதம்

0

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இரவு 12.45 அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளாடையுடன் உள்நுழைந்துள்ளார்.

இதை அவதானித்த அங்கிருந்த முதல் வருட மாணவி ஒருவர் அச்சமடைந்த நிலையில் கூக்குரலிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு தொலைபேசியூடாக இவ் விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மாணவியின் தாயார் உயிரிழப்பு
இதனால் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் இச்சம்பவத்தில் மனமுடைந்து மறுதினம் நோயினால் மரணமடைந்துள்ளதுள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தால் மாணவிகள் விடுதியில் இருந்து முற்றாக வெளியேறியுள்ளமையுடன் விடுதியின் பாதுகாப்பை உறதிப்படுத்துமாறு கோரி வகுப்பு பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏன் உள்ளனர் என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளனர்.

இதேவேளை வவுனியா பூவரசன்குளம் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய உள்ளாடையுடன் உள்நுழைந்த நபர் தொடர்பாக கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.