தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விரைவு தொடருந்து மிதி பலகைகளில் சவாரி செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Railway Department) தெரிவித்துள்ளது.
இதனை மீறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் விபத்துகளுக்கு தாம் பொறுப்பேற்க மாட்டோம் என்று திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.
சுற்றுலாப் பயணி
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிதி பலகைகளில் குறிப்பாக மலையக தொடருந்துகளில் சவாரி செய்வதை அவதானித்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், தொடருந்து திணைக்கள காவலர்கள் மற்றும் இதர அதிகாரிகளுக்கு, தொடருந்துகளில் பயணிகள் மிதி பலகைகளில் பயணிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிக அண்மைய சம்பவத்தில், ஒஹியா தொடருந்து நிலையத்திற்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) பொடி மெனிகே எக்ஸ்பிரஸில் இருந்து வெளிநாட்டுப் பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
மேலும், ஒரு மாதத்திற்கு முன்பு ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவர் சம்பவத்தில் இதேபோன்று பலத்த காயம் அடைந்துள்ளார்.