13 வயது சிறுவனை ஈவிரக்கமின்றி தாக்கிய பொலிஸ்!
13 வயது சிறுவனின் தலையில் பலமாகத் தாக்கியதாக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் முறைப்பாடளித்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை – யடவத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மீதே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறுவன் பந்தயத்துக்காக துவிச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்றதாகக் கூறி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலையடுத்து வீடு திரும்பிய சிறுவன் திடீரென சுகயீனமுற்று தரையில் மயங்கி வீழ்ந்ததாகவும் சிறுவனின் தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.