விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்: வங்கிக் கணக்குகளுக்கு வரவுள்ள பணம்
விவசாயிகளுக்கான பணம் எதிர்வரும் வாரம் முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எம்.எச்.எல்.அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி ஒரு ஹெக்டேயருக்கு 15,000 ரூபா நிதி மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இம்முறை நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
25,000 ஹெக்டேயர் நெற்செய்கை
குறித்த விவசாயிகள் தொடர்பான சரியான தகவல்களை திரட்டும் பணி இந்த வாரத்திற்குள் நிறைவடையும்.
இம்மாத பருவத்தில் 06 இலட்சம் ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆனால் கிடைக்கப்பெற்ற தகவலின்படி இதுவரை 25,000 ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நெல் சாகுபடிக்கு பின் உரம் இடுவதால், நெல் சாகுபடி செய்த பின், நிதி மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது“ என குறிப்பிட்டுள்ளார்.