;
Athirady Tamil News

பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு பொருத்தப்பட்ட இந்தியரின் இதயம்., தமிழ்நாட்டில் நடந்த அறுவை சிகிச்சை

0

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு இந்தியரின் இதயத்தைக் கொண்டு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

பத்தொன்பது வயதான ஆயிஷா ரஷான் (Ayesha Rashan) குழைந்தாகி பருவத்திலிருந்து இதய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.

இப்போது அவருக்கு இந்திய நன்கொடையாளரிடம் இருந்து இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சை தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேரில் (MGM HealthCare) நடந்துள்ளது.

ரூ.35 லட்சத்திற்கும் அதிக செலவான இந்த அறுவை சிகிச்சையை எம்ஜிஎம் ஹெல்த்கேர் வைத்தியர்கள் மற்றும் ஐஸ்வர்யம் அறக்கட்டளையினர் இலவசமாக செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2014-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக ஆயிஷா இந்தியா வந்தார். அங்கு அவருக்கு இதய பம்ப் பொருத்தப்பட்டது. இருப்பினும், அந்த சாதனம் காலப்போக்கில் பயனற்றதாக மாறியது மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.

சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் வைத்தியசாலையில், வைத்தியர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் மற்றும் வைத்தியர் சுரேஷ் ராவ் ஆகியோர் ஆயிஷாவின் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்திய பிறகு நிலைமையின் அவசரம் மற்றும் நிதி உதவியின் அவசியம் குறித்து அறிந்து, அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

ஆயிஷாவின் தாயார், தனது மகளுக்கு உயிர் கொடுத்த வைத்தியர்கள், வைத்தியசாலை மற்றும் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்தார்.

அவருக்கு பொருத்தப்பட்ட இதயம் டெல்லியைச் சேர்ந்த நன்கொடையாளருடையது.

“உண்மையில், இந்தியாவுடன் ஒப்பிடும்போது, ​​பாகிஸ்தானில் நல்ல மருத்துவ வசதிகள் இல்லை” என்று அவர் கூறினார். மேலும், “இந்தியாவிற்கும் அங்குள்ள வைத்தியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஆயிஷா உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பலாம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போது புதிய நம்பிக்கையுடன் நிறைந்திருக்கும் அதிர்ஷ்டசாலி பெண்ணான ஆயிஷா, தனது புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு ஒரு ஆடை வடிவமைப்பாளராக மாற விரும்புகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.