ஆட்சியில் இருக்கும் போதே ஜோ பைடனுக்கு அது நேரலாம்… அச்சத்தில் அமெரிக்க மக்கள்
இரண்டாவது முறை ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டால், வயது மூப்பு காரணமாக ஆட்சியில் இருக்கும் போதே அவர் தவறலாம் என அமெரிக்க மக்கள் அச்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயது குறித்து கவலை
பெரும்பாலான அமெரிக்க மக்கள் ஜோ பைடனின் வயது குறித்து கவலை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, ரஷ்யாவின் விளாடிமிர் புடினை எதிர்கொள்ளும் ஜோ பைடனின் திறன் குறித்தும் மக்கள் சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் தேர்தல் முன்னெடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பரப்புரைகள் மற்றும் ஆய்வுகளை முன்னெடுக்கும் JL Partners என்ற நிறுவனத்தின் இயக்குனர் Scarlett Maguire என்பவர் அமெரிக்க மக்களின் எண்ண ஓட்டத்தை பகிர்ந்துள்ளார்.
பெரும்பாலான அமெரிக்க மக்கள் தற்போது 81 வயதான ஜோ பைடனின் அறிவாற்றல் திறன் மற்றும் அவரது வெளிப்படையான சரிவு தொடர்பில் கவலை கொண்டுள்ளதாக Scarlett Maguire குறிப்பிட்டுள்ளார்.
இதனாலையே, இந்த முறை டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற வேண்டும் என அமெரிக்க மக்கள் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 71 வயதான விளாடிமிர் புடினை நேருக்கு நேர் சந்தித்து உரையாடும் நிலையில் 81 வயது ஜோ பைடன் இல்லை என பெரும்பாலான அமெரிக்க மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜோ பைடன் மறுபடியும்
இதனிடையே, ஜோ பைடனின் நினைவுத்திறன் குறித்தும் மக்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். சிறப்பு கவுன்சில் முன்னெடுத்துள்ள ஆய்வறிக்கையில், அவரது நினைவாற்றல் தற்போது மங்கும் நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் ஜோ பைடன் அதை மறுத்துள்ளதுடன், தமது நினைவாற்றல் தெளிவாக உள்ளது என்றே குறிப்பிட்டுள்ளார். ஜோ பைடன் மறுபடியும் தெரிவு செய்யப்பட்டால், அவர் நான்கு ஆண்டுகளை பூர்த்தி செய்வாரா என்ற கேள்விக்கு, அமெரிக்க மக்களில் 10ல் நால்வர் இல்லை என்றே பதிலளித்துள்ளதாக Scarlett Maguire தெரிவித்துள்ளார்.
மேலும், டொனால்டு ட்ரம்ப் தற்போது நியூயார்க்கில் குற்றவியல் விசாரணையை எதிர்கொண்டு வந்தாலும், தேர்தலில் அவருக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது என்றே அங்குள்ள மக்களின் மன நிலை என Scarlett Maguire பகிர்ந்துள்ளார்.