;
Athirady Tamil News

அம்பாறை 24வது பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் அனில் பெரேரா நியமனம் (video)

0

video link-https://wetransfer.com/downloads/508cd1d0a01faaea491a6924f2c0e9da20240425043453/54ac6a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05

இலங்கை இராணுவத்தின் அம்பாறை 24வது பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் அனில் பெரேரா நேற்று முன் தினம் (24) பதவியேற்றுக் கொண்டார்.

24வது டிவிசனுக்கு வந்தடைந்த புதிய பிரிவு தளபதிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.மகா சங்கத்தின் பிரித் சத்காயனா பின்னர், தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்.

அம்பாறை புத்தங்கல ராஜகிய பண்டித திகவாபி சுசீம தேரர் இங்கு மூன்று இனங்கள் வாழும் அம்பாறை மாவட்டத்தில் பணிபுரியும் பலமும் துணிவும் புதிய பிரிவு தளபதிக்கு கிடைக்குமென ஆசிர்வதித்துள்ளார்.அதன் பின் 24வது பிரிவு வளாகத்தில் மரம் இராணுவ தளபதியினால் நடப்பட்டது.

இந்நிகழ்வில் 24 ஆவது படைப் பிரிவின் கீழ் உள்ள படையணிகளின் பிரிவுத் தளபதிகளும் கலந்து கொண்டு புதிய பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அனில் பெரேராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.