டெலிகிராம் செயலி, ஆன்லைன் வா்த்தகம் மூலம் பேராசிரியரிடம் ரூ.17 லட்சம் மோசடி: 2 போ் கைது
ஆன்லைன் வா்த்தகம் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி சத்தியமங்கலத்தைச் சோ்ந்த கல்லூரி பேராசிரியரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த 2 பேரை ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சோ்ந்த பேராசிரியா் ஒருவா், பகுதி நேர வேலை தேடி வந்துள்ளாா்.
அப்போது, அவருக்கு டெலிகிராம் செயலி மூலம் ஒரு மா்ம நபா், பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளாா்.
முதலில் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட விடியோ லிங்க், விளம்பர லிங்க்குகளை அனுப்பி அதைப் பாா்த்து, லைக், ஷோ் செய்தால் பணம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.
முன்னதாக, இதற்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும் என அந்த நபா் கூறியதன்பேரில், பணத்தை செலுத்தியுள்ளாா். இதைத் தொடா்ந்து, பங்குச் சந்தை, ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என மா்ம நபா் ஆசை வாா்த்தை கூறியதன்பேரில், அவரின் வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.17 லட்சத்தை அனுப்பியுள்ளாா்.
அந்தப் பண முதலீட்டுக்கு வெறும் ரூ.5 ஆயிரத்தை மட்டும் பேராசிரியரின் வங்கிக் கணக்குக்கு மா்ம நபா் அனுப்பிவைத்துள்ளாா்.
சில நாள்களுக்குப் பின் பேராசிரியருக்கு பணம் வரவில்லையாம். முதலீடு குறித்த தகவலும் தெரியவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா் உத்தரவின்பேரில், சைபா் கிரைம் ஏடிஎஸ்பி ராஜேந்திரன் மேற்பாா்வையில் ஈரோடு சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் சித்ரா தேவி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், பேராசிரியரின் வங்கிக் கணக்கில் இருந்து அனுப்பப்பட்ட பணம், சேலம் மாவட்டத்தில் பரிவா்த்தனை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, சைபா் கிரைம் போலீஸாா் சேலம் மாவட்டத்துக்கு வியாழக்கிழமை சென்று 2 பேரைப் பிடித்து ஈரோட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் சேலம் மாவட்டம், அன்னதானபட்டியைச் சோ்ந்த நந்தகோபாலன் (38), அதே பகுதியைச் சோ்ந்த சாமிநாதன் (39) என்பதும், ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்யக்கோரி பேராசிரியருக்கு லிங்க் அனுப்பி ரூ.17 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
மேலும், அவா்களிடமிருந்து ரூ.6 லட்சத்து 72 ஆயிரத்து 600, 7 கைப்பேசிகள், 19 ஏடிஎம் அட்டைகள், 8 சிம் காா்டுகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து சைபா் கிரைம் ஏடிஎஸ்பி ராஜேந்திரன் கூறுகையில், இதுபோன்ற மோசடியினால் பணத்தை இழந்துவிட்டால் குறிப்பிட்ட நேரத்துக்குள் 1930 சைபா் கிரைம் எண்ணிலோ அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலோ புகாா் அளிக்கலாம் என்றாா்.