இஸ்ரேலின் இறுதித் திட்டம்: பேரழிவு தொடர்பில் அமெரிக்க விடுத்த எச்சரிக்கை
ஹமாஸ் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.
அதன் படி, தனது இறுதி இலக்காக இஸ்ரேல் எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரஃபா நகரை குறிவைத்துள்ளதகா தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய நகரம்
இந்நிலையில், காசா நகரில் இஸ்ரேலிய படைகள் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழிக்கும் வரை தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், தெற்கு காசாவில் அமைந்துள்ள முக்கிய நகரான ரஃபாவில் உள்ளே நுழைந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா எச்சரிக்கை
அதன் அடிப்படையில், தெற்கு காசாவில் அதிக சனத்தொகை கொண்ட நகரான ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது பேரழிவாக இருக்குமென வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேவேளை, ரஃபாவில் தாக்குதல் நடத்தாமல் இந்த போர் நிறைவடையாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதோடு இதன் பின்விளைவுகள் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.