இறந்த தாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட சிசு மரணம்
இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் உடலில் இருந்து மீட்கப்பட்ட சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் படையினர் இடையேயான போரில் இதுவரையிலும் 35000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள் என அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது காஸா சுகாதார அமைச்சகம்.
காஸாவின் வடக்குபகுதியை பெரும்பாலும் சிதைத்துவிட்ட இஸ்ரேல் ராணுவம் ரஃபா நகரம் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்நகரில் கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள், கடந்த சனிக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் ஆறு குழந்தைகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் குழந்தையின் தாயான Sabreenனும் ஒருவர், வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் போது இஸ்ரேல் நடந்த தாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பமும் பலத்த காயமடைந்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த Sabreen மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார், 7 மாத கர்ப்பிணியாக இருந்த Sabreenக்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டு குழந்தை மீட்கப்பட்டது.
1.4 கிலோகிராம் மட்டுமே எடைகொண்ட குழந்தை, அவசரசிகிச்சைபிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
குழந்தையை தந்தை வழி பாட்டி தத்தெடுத்துக் கொள்வதாக முன்வந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி சுமார் 4 நாட்களுக்கு பின்னர் குழந்தை உயிரிழந்த நிலையில், தாயின் சடலத்துக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.