மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்: பின்னணியில் தொடரும் மர்மம்
எதிர்வரும் அதிபர் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதில்லை என அக்கட்சியின் நிறுவுநர் பசில் ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) மொட்டுக் கட்சியின் ஆதரவை வழங்கும் தீர்மானம் குறித்து நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa), டீ.வி. சானக, திஸ்ஸ குட்டியாரச்சி, டப்.டீ.வீரசிங்க போன்றே இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், மொட்டுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தல் வேட்பாளராக நாமல் ராஜபக்சவை களமிறக்குமாறும் சிலர் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
பசிலின் தீர்மானம்
இந்நிலையில், தற்போதைய பரபரப்பான சூழலை தணிக்கவும், அதிபர் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிப்பதற்கான தீர்மானத்தை கட்சியின் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்ள வைக்கும் வரையிலும் மொட்டுக் கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடப்போவதில்லை என பசில் ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.