அமெரிக்காவில் கோர விபத்து: 3 இந்தியர்கள் பலி!
அமெரிக்காவில் கார் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இந்தியாவைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவத்தில் குஜராத் மாநிலம், அனந்த் மாவட்டத்தை சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதா பென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
அதிக வேகம்
அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள காரில் குறித்த மூவரும் சென்றுக் கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேகமாக வந்த குறித்த கார், கட்டுப்பாட்டை இழந்து 20 அடி உயரத்தில் பறந்து பாலத்தின் எதிர்புறத்தில் உள்ள மரம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
கார் வேக வரம்பை விட வேகமாக பயணம் செய்துள்ளதுடன் மரத்தில் மோதிய வேகத்தில் கார் நொருங்கியுள்ளது.
இச்சம்பவத்தின் போது காரில் 4 பேர் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் சிக்கி 3 இந்தியப் பெண்கள் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிர் பிழைத்தவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.