பதவி விலகினார் வியட்நாம் சபாநாயகர்! பின்னணியில் ஊழல் குற்றச்சாட்டு
வியட்நாம் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் வூங் டின் ஹியூ நேற்று (27) பதவி விலகியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கருத்தில் கொண்டு, தாமாகவே குறித்த பதவியில் இருந்து விலக வூங் டின் ஹியூ தீர்மானித்துள்ளார்.
67 வயதுடைய வியட்நாம் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவி விலகியுள்ளமை அந்த நாட்டின் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதவி விலகல்
வியட்நாம் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் வூங் டின் ஹியூ மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதற்கிடையே, அவரது உதவியாளர் பாம் தாய் ஹா, ஊழல் குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது வூங் டின் ஹியூ தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.