ஆறு நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதி தடைகளை நீக்கிய இந்தியா
இலங்கை உட்பட ஆறு நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சர்வதேச சந்தையில் தேவை அதிகரித்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
நாடுகள்
அதன்படி, பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராச்சியம், பூட்டான், பஹ்ரைன், மொரிஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதிகளை எளிதாக்குவதற்கு பொறுப்பாக தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (NCEL)நியமிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அனுமதி
அதேவேளை, மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதி சந்தைகளுக்காக 2000 MT வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அரசாங்கம் அனுமதித்துள்ளது.
மேலும், இந்த நோக்கத்திற்காக மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC) தொழில்நுட்ப ஆதரவு கோரப்பட்டுள்ளதுடன் கடந்த ஆண்டு சில காரணங்களால் 10 சதவீதத்திற்கும் குறைவான சேமிப்பு இழப்பு ஏற்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது.