கனடாவில் போலி வயகரா மாத்திரைகள் மீட்பு:மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் போலி வயகரா மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான மருந்துப் பொருட்களினால் பாரிய சுகாதார கேடுகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாத்திரைகள் உண்மையான மாத்திரைகள் போன்று பொதியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
போலி மருந்து மாத்திரைகள்
இதன்படி,காலாவதியாகும் திகதி பற்றிய விபரங்கள் வழமைக்கு மாறான அடிப்படையில் காணப்படுவதாகவும் தொடரிலக்கம் பொதிகளில் அச்சிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போலி மருந்து மாத்திரைகள் உண்மையானவை போன்றே தென்பட்டாலும், அவற்றில் சில வேளைகளில் மருந்துப் பொருட்களே அடங்கியிருக்காது என தெரிவித்துள்ளது.
இந்த மருந்து மாத்திரைகளை பயன்படுத்தியிருந்தால் அவற்றை உடனடியாக நிறுத்துமாறும், மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் மருந்துகளை பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.