ஆங்கிலேய கால்வாயில் சிக்கிய புலம்பெயர்ந்தவர்கள்: காவல் படையினர் நடவடிக்கை
ஆங்கில கால்வாயில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்தவர்களை கடலோர காவல் படை காப்பாற்றியுள்ளனர்.
புலம்பெயர்ந்தவர்கள் மீட்பு
இன்று நடைபெற்ற ஒரு மீட்பு நடவடிக்கையில், ஆங்கில கால்வாயில் சிறு படகில் சிக்கியிருந்த குடியேற்ற நபர்களை கடலோர காவல்படை மீட்டுள்ளது.
இந்த சம்பவம் கென்ட்டின் டீல் கடற்கரைக்கு அப்பால், குட்வின் சாண்ட்ஸ்(Goodwin Sands) அருகே நடந்துள்ளது.
காலை 7:45 மணியளவில் அதிகாரிகளுக்கு இந்த சூழ்நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கப்பலை கண்டுபிடித்து உதவுவதற்காக கென்ட்டின் பல்வேறு இடங்களிலிருந்து இரண்டு காவல் படகுகளும் ஒரு ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டன.
இதையடுத்து கடலோரக் காவல் படை அறிக்கை ஒன்றில், படகில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவசரகால சேவைகள் அல்லது அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக உறுதி செய்தது.
மீட்கப்பட்ட குடியேற்ற நபர்களை துல்லியமான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.
கடந்த வாரம் மட்டும்
கால்வாய் முழுவதும் அதிகரித்து வரும் குடியேற்ற முயற்சிகளின் பின்னணியில் இந்த மீட்பு நடவடிக்கை நடந்துள்ளது.
ஸ்கை நியூஸ் செய்தி நிறுவனத்தின் தகவல் படி, கடந்த வாரம் மட்டும் ஒன்பது படகுகள் மொத்தம் 543 குடியேற்றத் தொழிலாளர்களைக் கொண்டு கடல் பயணத்தை மேற்கொண்டன.
இந்த செய்தி சர்ச்சைக்குரிய ருவாண்டா நாடுக்கு நாடுகடத்தும் மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதோடு ஒத்துப்போகிறது.
ஆபத்தான இந்த பயணங்களை குடியேற்றத் தொழிலாளர்கள் மேற்கொள்வதை தடுக்கும் என்று பிரிட்டன் அரசு இந்தக் கொள்கையின் மூலம் நம்புகிறது.
ஆனால், மனித உரிமை குழுக்களும் விமர்சகர்களும் இந்த திட்டத்தை மனிதாபிமானமற்றது என்று கண்டித்துள்ளனர்.