இலங்கையில் வாகன இறக்குமதியை ஆரம்பித்த டொயோட்டா நிறுவனம்
சில வருடங்களுக்குப் பின்னர் ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்தின் இலங்கைக் கிளை வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது.
அதன்படி, பேருந்துகள் மற்றும் வான்கள் விற்பனை குறித்து வார இறுதி நாளிதழ்களில் அந்நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மற்றும் வான்களை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த வாகன வகைகளின் ஆரம்ப விலை ஒன்றரை கோடி ரூபாய் என விளம்பரங்களில் காட்டப்பட்டுள்ளது.
இந்த வகையைச் சேர்ந்த பத்து வருடங்கள் பழமையான வான்கள் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதன் பின்னணியில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கைக்கான வாகன இறக்குமதி சுமார் நான்கு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தமையால் இந்நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் அசாதாரணமாக உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.