பல்கலை கல்விசாரா ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்
அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் நீக்குவது மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான அமைச்சரவைப் பத்திரங்கள் அமைச்சு உபகுழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்போது, இந்த விடயம் தொடர்பான இரண்டு அமைச்சரவைப் பத்திரங்கள் அமைச்சு உபகுழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்படும் காலம்
அதன்படி எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவது மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சு உபகுழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.