அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது வீட்டின் கண்ணாடிகள் மற்றும் ஹயஸ் வான் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீட்டிலேயே குறித்த சம்பவம் நேற்று(27) இரவு இடம்பெற்றுள்ளது.
வன்முறையில் காயமடைந்த 70 வயதான முதியவர் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொழில் போட்டியே வன்முறைக்கு காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.