சுதந்திரக்கட்சியின் உண்மையான பிரதிநிதிகள் யார்..! மல்வத்துபீடத்திற்கு எழுந்த சந்தேகம்
சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று பிரிவினர் உரிமை கோருவதால், அதன் உண்மையான பிரதிநிதிகள் யார் என்ற கேள்வி மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜேதாச ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் (26) மல்வத்து மகா நாயக்க தேரரைச் சந்தித்தபோது, கட்சியின் உண்மையான உரிமையாளர்கள் யார் என்ற கேள்விக்கு நீதிமன்றத்தால் மட்டுமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கும்
கட்சிக்கென அரசியலமைப்பு இருப்பதால், எதிர்காலத்தில் நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, தனியான அரசியல் கட்சியுடன் இணைந்து பயணிக்க நினைக்கும் ஒரு குழுவினர் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
மறைமுக நிகழ்ச்சி நிரல் உள்நோக்கம் கொண்ட குழுவினால்
சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் 116 பேர் ஏகமனதாக தம்மை செயற்பாட்டுத் தலைவராக தெரிவு செய்ததை வலியுறுத்திய அமைச்சர், நீதிமன்றத்தின் கோரிக்கைக்கு இணங்க தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் எதிர்காலத்தில் நீதிமன்றில் தெரிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மறைமுக நிகழ்ச்சி நிரல் மற்றும் உள்நோக்கம் கொண்ட குழுவினால் பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் துஷ்யந்த மித்ரபால, சரத் ஏகநாயக்க, சஜின் டி வாஸ் குணவர்தன, பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.