அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரவிருந்த விமானத்தில் ஏற்பட்ட பதற்றம்!
அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு வருகை தரவிருந்த விமானம் ஒன்றின் சரக்கு பிரிவில் நபரொருவர் நுழைந்ததால் அங்கு சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (26-04-2024) இடம்பெற்ற இச் சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் சென்ற குறித்த நபர், விமானத்தின் பொருட்கள் வைக்கும் பகுதிக்குள் நுழைய முயன்றபோதே அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது சிட்னி சர்வதேச விமான நிலையத்துக்குள் இவர் நுழைவதற்கு 12 மாதங்களுக்கு தடைவிதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.